வெச்சான் பாரு iQOO.. 13000mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் டேப்லெட் மாடலான ஐக்யூ பேட் 6 ப்ரோ (iQOO Pad 6 Pro) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 13000mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 144Hz டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர்கள், 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த ஐக்யூ பேட் 6 ப்ரோ மாடலின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனுடன் ஐக்யூ பேட் 6 ப்ரோ மற்றும் ஐக்யூ டிடபுள்யூஎஸ் 5ஐ (iQOO TWS 5i) இயர்பட்ஸ் மாடல்களும் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இதில் பிரீமியம் டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களுடன் ஐக்யூ பேட் 6 ப்ரோ ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. 4K அல்ட்ரா எச்டி கேமிங் டிஸ்பிளேவுடன் கேமிங் பிரியர்களையும் தட்டித் தூக்கி இருக்கிறது.

ஐக்யூ பேட் 6 ப்ரோ அம்சங்கள் (iQOO Pad 6 Pro Specifications): 13.2 இன்ச் (3840 x 2512 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1.07 பில்லியல் கலர் டெப்த் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 13000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மெட்டல் பாடியில் 6.18 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 663 கிராம் எடை கொடுத்துள்ளது. 4K ரெசொலூஷன் கொண்ட 13 எம்பி மெகாபிக்சல் ரியர் கேமரா கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கிடைக்கிறது. 8 ஸ்பீச்சர்கள் கிடைக்கின்றன. பிரீமியம் ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி உள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை கொடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 4K கேம் வீடியோ ரெக்கார்டிங், 4K கேமிங் கேமரா உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. ஐக்யூ கேம் லைவ் ஸ்ட்ரீமிங் அசிஸ்டன்ட் (iQOO Game Live Streaming Assistant) கிடைக்கிறது. 144fps கேமிங் அவுட்புட் வருகிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற டிஸ்பிளே, ஸ்பீக்கர் மற்றும் சிப்செட் உள்ளது.
ஐக்யூ பேட் 6 ப்ரோ விலை (iQOO Pad 6 Pro Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.63,922ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.71,029ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.82,397ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.95,163ஆகவும் இருக்கிறது.
இந்த விலை சீன மார்கெட்டில் நிர்ணயம் செய்யப்பட விலையாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாவது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் தெரிய வாய்ப்புள்ளது. ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனும் சீனாவில் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் வெளியாகும். ஏனென்றால், ஐக்யூ 15ஆர் இந்தியாவில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications