Home
Tablets

அறிமுகமானது புதிய iQOO டேப்லெட்.. 10000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ பேட் 5சி (iQOO Pad 5c) மாடலை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஐக்யூ பேட் 5சி மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐக்யூ பேட் 5சி அம்சங்கள் (iQOO Pad 5c Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே (LCD display) உடன் ஐக்யூ பேட் 5சி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 2.8கே ரெசல்யூஷன் (2.8K Resolution) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய iQOO டேப்லெட்.. 10000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 chipset) உடன் ஐக்யூ பேட் 5சி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி + 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஐக்யூ பேட் 5சி மாடல் விற்பனைக்கு வரும். அதேபோல் குவாட் ஸ்பீக்கர் செட்டப் (quad-speaker setup) கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ பேட் 5சி மாடல்.

8எம்பி ரியர் கேமரா உடன் ஐக்யூ பேட் 5சி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த மாடலில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய சாதனத்தில் உள்ளது.

ஃபேஸ் அன்லாக் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஐக்யூ டேப்லெட். அதேபோல் ஏஐ பிபிடி அசிஸ்டன்ட், மல்டி-ஸ்கிரீன் கொலாபரேஷன், வயர்லெஸ் பிரிண்டிங், டாக்குமென்ட் ஸ்கேனிங் மற்றும் கேம் சூப்பர் ரெசல்யூஷன், லைவ் ஸ்ட்ரீமிங் அசிஸ்டன்ட் போன்ற அனைத்து அம்சங்களையும் ஆதரிக்கிறது இந்த புதிய சாதனம்.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த சாதனம் இயங்கும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

10000எம்ஏஎச் பேட்டரி உடன் ஐக்யூ பேட் 5சி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

வைஃபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போரட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் ஐக்யூ பேட் 5சி மாடலின் ஆரம்ப விலை 2,699 Yuan (இந்திய மதிப்பில் ரூ.37,609)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Pad 5c with 10000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X