அதிர போகுது ஆர்டர்.. 12050mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. அறிமுகமானது புது iQOO டேப்லெட்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ பேட் 5 ப்ரோ (iQOO Pad 5 Pro) மற்றும் ஐக்யூ பேட் 5 (iQOO Pad 5) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு டேப்லெட் மாடல்களும் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய ஐக்யூ டேப்லெட் மாடலிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஐக்யூ பேட் 5 ப்ரோ அம்சங்கள் (iQOO Pad 5 Pro specifications): 13-இன்ச் 3.1கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது மேலும் இதன் டிஸ்பிளேவில் 3096×2064 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3.7ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் (Octa Core Dimensity 9400+ 3nm) சிப்செட் உடன் ஐக்யூ பேட் 5 ப்ரோ டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஐக்யூ பேட் 5 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
13எம்பி ரியர் கேமராவுடன் ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது.
12050mAh பேட்டரி உடன் ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), 8 ஸ்பீக்கர்கள், வைஃபை 7, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டேப்லெட் எடை 635 கிராம். ஆகும்.
ஐக்யூ பேட் 5 அம்சங்கள் (iQOO Pad 5 specifications): 12.1-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது மேலும் இதன் டிஸ்பிளேவில் 3096×2064 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்
3.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் டைமன்சிட்டி 9300 பிளஸ் 4என்எம் (Octa Core Dimensity 9300+ 4nm) சிப்செட் உடன் ஐக்யூ பேட் 5 டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இம்மார்டலிஸ் ஜி720 ஜிபியு (Immortalis G720 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
ஓர்ஜின்ஓஎஸ்5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் ஐக்யூ பேட் 5 மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் இந்த புதிய ஐக்யூ பேட் 5 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8எம்பி ரியர் கேமராவுடன் ஐக்யூ பேட் 5 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது.
10000mAh பேட்டரி உடன் ஐக்யூ பேட் 5 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), 6 ஸ்பீக்கர்கள், வைஃபை 7, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ பேட் 5 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டேப்லெட் எடை 590 கிராம். ஆகும்.

ஐக்யூ பேட் 5 ப்ரோ விலை:
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடலின் விலை 3199 yuan (இந்திய மதிப்பில் ரூ.37,940)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடலின் விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,500)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடலின் விலை 3799 yuan (இந்திய மதிப்பில் ரூ.45,060)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 ப்ரோ மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.47,430)
ஐக்யூ பேட் 5 விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 மாடலின் விலை 2499 yuan (இந்திய மதிப்பில் ரூ.29,640)
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 மாடலின் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,200)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 மாடலின் விலை 3099 yuan (இந்திய மதிப்பில் ரூ.36,760)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் 5 மாடலின் விலை 3499 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,500)


Click it and Unblock the Notifications








