Home
Tablets

iQOO Pad: முதல் முறையாக டேப்லெட் மாடலை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! எப்படி இருக்கு? என்ன விலை?

ஐக்யூ (iQOO) நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஐக்யூ பேட் (iQOO Pad) எனப்படும் இந்த டேப்லெட் மாடல் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐக்யூ பேட் சாதனம் அலுமினியம் பாடி மற்றும் 6.59மிமீ தடிமன் கொண்டது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதேபோல் இந்த டேப்லெட் 12.1-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

iQOO Pad: முதல் முறையாக டேப்லெட் மாடலை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ பேட். அதேபோல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த ஐக்யூ டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

3.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9000 பிளஸ் 4என்எம் பிராசஸர் உடன் Mali-G710 10-core GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ பேட் சாதனம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இதை நம்பி வாங்கலாம்.

OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஐக்யூ பேட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டு ஐக்யூ பேட் சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஐக்யூ பேட் சாதனம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஐக்யூ பேட் மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

10000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ பேட் சாதனம் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் 6 ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

iQOO Pad: முதல் முறையாக டேப்லெட் மாடலை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ்,புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட் ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு இண்டர்ஸ்டெல்லர் கிரே நிறத்தில் இந்த ஐக்யூ பேட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் எடை 585 கிராம். குறிப்பாக ஐக்யூ பேட் சாதனத்தின் ஆரம்ப விலை 2599 யுவான் (ரூ. 30,520) ஆகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO launched first tablet to compete with OnePlus tablet model: check iQOO Pad price specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X