தலைசுற்ற வைக்கும் விலை.. 12எம்பி கேமரா.. 13 இன்ச் டிஸ்பிளே.. iPad Air 2024 அறிமுகம்.. என்னென்ன அம்சங்கள்?
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில் (Apple Let Loose Event) புதிய ஐபேட் ப்ரோ 2024 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 13-இன்ச் மற்றும் 11-இன்ச் டேப்லெட் மாடல்கள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
ஐபேட் ப்ரோ 2024 அம்சங்கள் (iPad Pro 2024 specifications): அதாவது 13-இன்ச் மற்றும் 11-இன்ச் டிஸ்பிளே அளவைக் கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் தரமான சிப் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் முந்தைய மாடல்களை விட தனித்துவமான வடிவமைப்பு கொண்டு வெளிவந்துள்ளன இந்த புதிய சாதனங்கள்.

குறிப்பாக 13-இன்ச் மற்றும் 11-இன்ச் டிஸ்பிளே கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் Liquid ரெட்டினா டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1600 நிட்ஸ் எச்டிஆர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன இவற்றின் டிஸ்பிளே. மேலும் இவற்றில் ஒஎல்இடி டிஸ்பிளே இருப்பதால் தனித்துவமான திரை அனுபவம் கிடைக்கும்.
இரண்டு ஐபேட் ப்ரோ மாடல்களும் எம்4 சிப் (M4 chip) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் எம்2 சிப்பை விட 50 சதவீதம் எம்4 சிப் வேகமானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனங்களை வேகமாக இயக்க முடியும். அனைத்து பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த டேப்லெட் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லெட் மாடல்களின் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் TrueDepth கேமரா உள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடல்களின் பின்புறத்தில் 12-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + LiDAR ஸ்கேனர் உள்ளன. பின்புற கேமரா உதவியுடன் 4கே ProRes வீடியோ பதிவு செய்ய முடியும். அதேசமயம் 30fpsamd ஸ்லோ மோஷன் வீடியோ பதிவும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபேட் ப்ரோ சாதனங்களில் AI பணிகளுக்கான நியூரல் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் கூறுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல்களின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இந்த ஐபேட் ப்ரோ மாடல்களை கீபோர்டுடன் இணைக்கும் போது மடிக்கணினியைப் போலவே உணரலாம்.
ஐபாட் ப்ரோ மாடல்களில் நானோ-டெக்ஸ்சர் கோட்டிங் (nano-texture coating) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேட் டிஸ்ப்ளே ஃபினிஷை விரும்பும் பயனர்கள் இந்த ஐபேட் ப்ரோ மாடல்களை நம்பி வாங்கலாம். அதுவும் ஐபாட் ப்ரோ 13-இன்ச் மாடல் வெறும் 5.1 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 6E, புளூடூத் 5.3, மற்றும் தண்டர்போல்ட் 4/யுஎஸ்பி 4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது புதிய ஐபேட் ப்ரோமாடல்கள். குறிப்பாக இந்த இரண்டு ஐபேட் ப்ரோ மாடல்களும் 5ஜி ஆதரவை வழங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் மாடல்களுடன் ஆப்பிள் பென்சில் ப்ரோ மாடலை பயன்படுத்தலாம்.
256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபேட் ப்ரோ 11 இன்ச் மாடலின் விலை ரூ.99,900-ஆக உள்ளது. அதேபோல் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபேட் ப்ரோ 13 இன்ச் மாடலின் விலை ரூ.1,29,900-ஆக உள்ளது. வரும் மே 15 முதல் இந்த ஐபேட் ப்ரோ 2024 சாதனங்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








