Home
Tablets

7.9-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபேட் மினி 5.!

புதிய ஐபேட் மினி 5 சாதனத்தில் ஏ10 ஃபியூஷன் சிப் அல்லது ஏ10எக்ஸ் ஃபியூஷன் சிப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி விரைவில் புதிய ஐபேட் மாடல்களை வரிசையாக அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

7.9-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ஐபேட் மினி 5.!

புதிய ஐபேட்களில் ஒன்று ஐபேட் மினி 5 என அழைக்கப்படும் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க ஐபேட் மிக 4 போன்று இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தகவல்
வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

புதிய ஐபேட் மினி 5 சாதனம் 7.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இக்கருவி 6.1எம்.எம் அளவு தடிமனாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லைட்னிங் கனெக்ட்டர்

லைட்னிங் கனெக்ட்டர்

மேலும் லைட்னிங் கனெக்ட்டர், டச் ஐ.டி,மற்றும் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் ஆடியோ வசதிகளை கொண்டுள்ளது ஐபேட் மினி 5 சாதனம். பின்பு இனிமேல் வரும் ஐபேட்களில் பின்புற மைக்ரோபோன் மேல்பக்கத்தின் மத்தியில் பொருத்தப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

 மென்பொருள்:

மென்பொருள்:

புதிய ஐபேட் மினி 5 சாதனத்தில் ஏ10 ஃபியூஷன் சிப் அல்லது ஏ10எக்ஸ் ஃபியூஷன் சிப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த புதிய சாதனம் ஆப்பிள் பென்சில் வசதியை சப்போர்ட் செய்யுமா என்பதை பற்றி ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

குறைந்த விலை

குறைந்த விலை

ஆப்பிள் நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட செய்தி குறிப்பில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில்
அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPad mini 5 May Look Similar to the iPad mini 4, Expected to Launch in First Half of 2019: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X