அக்டோபர் 4: விற்பனைக்கும் வரும் புதிய ஐபேட்(2019): விலை எவ்வளவு தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் ஐபோன் 11சீரிஸ், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களுடன் 7 ஆப்பிள் ஐபேட்(2019) மாடலையும் அறிமுகம் செய்தது.

அக்டோபர் 4
இந்நிலையில் ஆப்பிள் ஐபேட்(2019) மாடல் இன்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபேட்(2019) டிஸ்பிளே
ஆப்பிள் ஐபேட்(2019) சாதனம் பொதுவாக 10.2-இன்ச் ரெட்டினா டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160x1620 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட் வசதி:
இந்த ஆப்பிள் ஐபேட்(2019) சாதனம் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஆப்பிள் பென்சில் வசதி மற்றும் பல்வேறு மென்பொருள் அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

கேமரா அமைப்பு
ஆப்பிள் ஐபேட்(2019) சாதனம் சாதனத்தின் பின்புறம் 8 எம்.பி. கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர் வசதி உள்ளது. பின்பு 1.2எம்பி முன்புற கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
இந்த சாதனத்;தில் 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை,ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன் ஐபேட் ஒ.எஸ். 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 4.2 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

ஆப்பிள் ஐபேட்(2019) 32ஜிபி வைபை மாடலின் விலை ரூ.29,900/-
ஆப்பிள் ஐபேட்(2019) 128ஜிபி வைபை மாடலின் விலை ரூ.37,900/-
ஆப்பிள் ஐபேட்(2019) 32ஜிபி வைபை 10 செல்லுலார் மாடலின் விலை ரூ.40,900/-
ஆப்பிள் ஐபேட்(2019) 128ஜிபி வைபை 10 செல்லுலார் மாடலின் விலை ரூ.48,900/-


Click it and Unblock the Notifications