மார்க்கெட்டே மிரள போகுது.. 7000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. Infinix-ன் முதல் டேப்லெட்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்பேட் (Xpad) என்று அழைக்கப்படும் டேப்லெட் ஆனது வரும் வாரங்களில் உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த எக்ஸ்பேட் சாதனத்தின் அம்சங்களைப் பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் அம்சங்கள் (Infinix XPad Specifications): 11-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த எக்ஸ்பேட் மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080×2400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்டிமெட் சிப்செட் (MediaTek Helio G99 Ultimate chipset) வசதியுடன் இந்த எக்ஸ்பேட் மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Infinix XOS skin சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேபலெட் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது 256ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் டேப்லெட்.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் ஆனது 12எம்பி மெயின் கேமரா + 8எம்பி செகண்டரி கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
7000mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய எக்ஸ்பேட் மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரி சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக இன்பினிக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் மாடல். மேலும் இந்த எக்ஸ்பேட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இப்போது வரை இதன் அறிமுக தேதி இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் வரும் வாரங்களில் இந்த டேப்லெட் அறிமுகமாகும்.
குறிப்பாக எக்ஸ்பேட் மாடல் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங், ஹானர் போன்ற நிறுவனங்களின் டேப்டெல் மாடல்களுக்கு போட்டியாக இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo courtesy: naijaandroidarena.com, gizmochina.com
(Source)


Click it and Unblock the Notifications








