Home
Tablets

ஆர்டர் வெளுத்து கட்டும்.. ரூ.9,899 போதும்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

டேப்லெட் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான கம்மி பட்ஜெட்டில் 4ஜி சிம் சிலாட் மட்டுமல்லாமல், 11 இன்ச் டிஸ்பிளே, 4 ஸ்பீக்கர்கள், 7000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, சாட்ஜிபிடி பவர்ட் ஃபோலக்ஸ் வாய்ஸ் அசிஸ்டன்ட், 8 எம்பி கேமரா போன்ற நம்ப முடியாத பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ (Infinix XPad LTE) டேப்லெட் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டின் விவரம் இதோ.

இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ அம்சங்கள் (Infinix XPad LTE Specifications): இந்த டேப்லெட் எல்டிஇ (LTE) மட்டுமல்லாமல், வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டியும் கொடுக்கிறது. மெட்டல் பாடி டிசைனில் பிரீமியம் குவாலிட்டி லுக் கொடுக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் லுக்கில் 7.58 எம்எம் தடிமன் வருகிறது.

ஆர்டர் வெளுத்து கட்டும்.. ரூ.9,899 போதும்.. 11 இன்ச் டிஸ்பிளே மாடல்!

496 கிராம் எடை உள்ளது. 11 இன்ச் (1200 x 1920 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 440 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அடிமட்ட பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் (XOS) கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் (MicroSD Slot) உள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி அல்லது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. டேப்லெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. ஆனால், கூடுதலாக டிடிஎஸ் ஆடியோ (DTS Audio) மற்றும் 4 சவுண்ட் மோட்கள் கொண்டிருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் டேப்லெட்டில் 7000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி-சி சார்ஜிங் (USB-C Charging) வருகிறது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. குறிப்பிட்டு சொல்லும் அம்சமாக வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) இருக்கிறது.

ஏனென்றால், சாட்ஜிபிடி பவர்ட் ஃபோலக்ஸ் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Folax Voice Assistant) வருகிறது. ஜி-சென்சார் (G-Sensor), ஈ-காம்பஸ் (E-Compass), கைரோஸ்கோப் (Gyroscope) ஆகியவற்றை பேக் செய்துள்லது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை வெர்ஷனில் வை-பை 5 (Wi-Fi 5) வருகிறது.

அதேபோல ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் நானோ சிம் சிலாட் உடன் 4ஜி எல்டிஇ (4G LTE) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. டைட்டன் கோல்டு (Titan Gold), ப்ரோஸ்ட் ப்ளூ (Frost Blue) மற்றும் ஸ்டெல்லர் கிரே (Stellar Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் டேப்லெட்டின் 4 ஜிபி + 128 மெமரி மாடலின் விலை ரூ.10,999 ஆக இருக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ. 9,899 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. எந்த தளத்தில் ஆர்டருக்கு வரும் என்பது விரைவில் தெரிய வரும்.

அடிமட்ட விலைக்கு 4ஜி சிம் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், மீடியம் பர்ஃபாமென்ஸ் சிப்டெட், நல்ல டிஸ்பிளே மற்றும் பேட்டரி பேக்கப் கூடவே வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்கள் வேண்டுமானால், இந்த புதிய இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எல்டிஇ மாடலை தாராளமாக ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். பட்ஜெட்டுக்கு ஏற்றது.

Best Mobiles in India

English summary
Infinix XPad LTE With 8GB RAM 7000mAh Battery Sale From September 26 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X