காத்திருப்பு ஓவர்.. 7000mAh பேட்டரி.. 256GB மெமரி.. அறிமுகமானது Infinix முதல் டேப்லெட்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் (Infinix Xpad) எனப்படும் டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே. 256ஜிபி மெமரி, ஏஐ (ai) அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் சிறப்பான அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் அம்சங்கள் (Infinix XPad Specifications): 11-இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,920 x 1,200 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்டிமெட் சிப்செட் (MediaTek Helio G99 Ultimate chipset) வசதியுடன் இந்த எக்ஸ்பேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஓழுளு சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் டேப்லெட்.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் ஆனது ஸ்கொரிஷ் கேமரா மாட்யூல் (squarish camera module) மற்றும் 8எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உடன் இந்த புதிய டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7000mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரி சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்டிமீடியா தேவைகளுக்காக இந்த டேப்லெட்டில் குவாட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் ஏஐ அசிஸ்டண்ட் ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், எல்டிஇ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
டைட்டன் கோல்டு (Titan Gold), ப்ரோஸ்ட் ப்ளூ (Frost Blue), ஸ்டெல்லர் கிரே (Stellar Grey) நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்டெல் தற்போது அறிமுகம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். கூடிய விரைவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும், அப்போது விலை குறித்த தகவல்களை அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








