லேப்டாப் Size-ல் டேப்லெட், விலையும் கம்மி.. 13.2-இன்ச் டிஸ்பிளே, 6.19 மிமீ ஸ்லிம், 8000mAh பேட்டரி, 2TB மெமரி!
கையடக்க டேப்லெட்டை தேடும் பயனர்கள் எல்லாரும் ஷாக் ஆகும்படியான "ஸ்க்ரீன் சைஸ்" கொண்ட ஒரு புதிய டேப்லெட் மாடல் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதை அறிமுகம் செய்யவுள்ளது இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் ஆகும்.
எந்த மாடல்? அது இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் (Infinix XPad Edge) டேப்லெட் ஆகும். இது வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மலேசிய அறிமுகத்தை தொடர்ந்து இது மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படுமா என்கிற விவரங்கள் டிசம்பர் 18 வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படலாம்.

இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் அறிமுகத்திற்கு முன்னதாக, இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இந்த டேப்லெட்டின் டிசைன் மற்றும் பொஷிஷனிங் பற்றிய விவரங்கள் பகிரப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் மூலம் இந்த டேப்லெட் அணை ப்ரொடெக்டிவிட்டி மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டிலுமே கவனம் செலுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது.
இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் மாடலில் உறுதி செய்யப்பட்டுள்ள டிசைன் மற்றும் அம்சங்கள்: இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் மாடல் ஆனது ஸ்லிம் ஆன 6.19 மிமீ யுனிபாடி மெட்டல் டிசைனை கொண்டு உள்ளது மற்றும் இது 588 கிராம் என்கிற அளவிலான எடையை கொண்டு உள்ளது என்பதை இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது இது இலகுரக மற்றும் பிரீமியம் கட்டமைப்பை வழங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் டேப்லெட் ஆனது 2400 x 1600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 13.2-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆடியோவை பொறுத்தவரை குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டமை கொண்டுள்ளது/ இது வழக்கமான டேப்லெட்களில் காணப்படும் ஸ்பீக்கர்களுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக சவுண்ட் அவுட்புட்டை வழங்குவதாக இன்பினிக்ஸ் பிராண்ட் கூறுகிறது.
சாஃப்டவேரை பொறுத்தவரை இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் டேப்லெட் ஆனது எக்ஸ்பேட் எட்ஜ் டபுள்யூபிஎஸ் ஆபிஸ் (XPad Edge WPS Office) உடன் ப்ரீஇன்ஸ்டால்டு ஆக வருகிறது மற்றும் ஸ்பிளிட் ஸ்கிரீன், பேரலல் விண்டோஸ், போன் காஸ்டிங் மற்றும் பிசி செக்கண்டரி டிஸ்பிளே மோட் பல உற்பத்தித்திறன் சார்ந்த டூல்களை ஆதரிக்கிறது.
மேலும் இன்பினிக்ஸ் நிறுவனமானது - எக்ஸ்பேட் எட்ஜ் மாடலில் போலாக்ஸ் (Folax) வாய்ஸ் அசிஸ்டென்ட், ஹாய் டிரான்ஸ்லேஷன் (Hi Translation), ஏஐ ஸ்மார்ட் ஸ்கிரீன் ரெகக்னிஷன் மற்றும் ஏஐ கிரியேஷன் உள்ளிட்ட ஏஐ-அடிப்படையிலான அம்சங்களின் தொகுப்பையும் அறிமுகப்படுத்துகிறது. கூடுதலாக 4ஜி மற்றும் வைஃபை இணைப்புக்கான ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளது.
வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்?அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக, இன்பினிக்ஸ் எக்ஸ்பேட் எட்ஜ் மாடல் ஆனது ஷாப்பீ மலேஷியா (Shopee Malaysia) தளத்தில் காணப்பட்டுள்ளது. அதன் வழியாக இன்பினிக்ஸ் நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ (அவுட் ஆப் பாக்ஸ்) கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் மற்றும் 2டிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரிக்கான ஆதரவையும் வழங்ம்
கேமராக்களை பொறுத்தவரை இது முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் 8-மெகாபிக்சல் கேமராக்களை பேக் செய்யும். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 18W வயர்டு சார்ஜிங் கொண்ட 8,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது சிங்கிள் செலஸ்டியல் இங்க் க்ரே (Celestial Ink Gray) கலரில் அறிமுகம் செய்யப்படும். விலையை பொறுத்தவரை இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.29,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








