பட்ஜெட் விலையில் அசத்தலான ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8.!
இந்த ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஐபால் நிறுவனம் ஸ்லைடு தொடரை விரிவாக்கம் செய்துள்ளது, அதன்படி தற்சமயம் ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட், 4ஜி எல்டிஇ போன்ற பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு 22 பிராந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கிறது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8:
ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனம் பொதுவாக 7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
1024×600 பிக்சல் தீர்மானம் இவற்றுள்ள அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர்:
இக்கருவி குவாட்-கோர் சிப்செட் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இந்த ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:
ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனத்தில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்
எனக் கூறப்படுகிறது.


விலை:
ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8 டேப்லெட் சாதனத்தில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
விலை மதிப்பு ரூ.8,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications