புதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
புதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் மாடலில் 7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22 இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ஐபால் நிறுவனம் புதிய ஸ்லைடு எலன் டேப்லெட் 3x32 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த டேப்லெட் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் 3x32 டேப்லெட் மாடல் பொதுவாக கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

ஐபால் ஸ்லைடு எலன் 3x32 டேப்லெட் :
ஐபால் ஸ்லைடு எலன் 3x32 டேப்லெட் மாடல் பொதுவாக 10.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1280 x 800 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அடிப்படையில் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இந்த சாதனம் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதனபின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் மாடல் பொறுத்தவரை 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் விலை:
புதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் மாடலில் 7000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22 இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
இந்திய விலை மதிப்பு ரூ.16,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








