மீடியாபேட் எம்5 லைட் சாதனத்திற்கு முன்பதிவு துவக்கம்.!

|

மிகவும் எதிர்பார்த்த மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தின் முன்பதிவு துங்கியுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் வரும் மார்ச் 13-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.22,990-விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே

10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே

மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடல் ஆனது 10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி

ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி

இந்த சாதனத்தில் ClariVu 5.0 தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இது வண்ணங்களை சிறப்பான முறையில் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது, பின்பு தெளிவான காட்சிக்கு இது மிகவும் உதவும் எனக் கூறப்படுகிறது.

புல்வாமா: வெடிகுண்டு வேதிப்பொருள் தயாரிக்க அமேசானில் ஆர்டர்?புல்வாமா: வெடிகுண்டு வேதிப்பொருள் தயாரிக்க அமேசானில் ஆர்டர்?

8மெகாபிக்சல் ரியர் கேமரா

8மெகாபிக்சல் ரியர் கேமரா

மீடியாபேட் எம்5 லைட் டேப்லெட் மாடலில் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாபேட் எம்5 லைட் சிப்செட்

மீடியாபேட் எம்5 லைட் சிப்செட்

இந்த டேப்லெட் மாடலின் சிப்செட் பற்றி பேசுகையில், 2.4ஜிகாஹெர்ட்ஸ் கிரிண் 659 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியும், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது, எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

7500எம்ஏஎச் பேட்டரி

7500எம்ஏஎச் பேட்டரி

மீடியாபேட் எம்5 லைட் சாதனத்தில் 7500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,பின்பு குவிக் சார்ஜ் வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ஹவாய் ஹிஸ்டன் 5.0

ஹவாய் ஹிஸ்டன் 5.0

ஹவாய் ஹிஸ்டன் 5.0 ஆடியோ வசதியைக் கொண்டு இந்த மீடியாபேட் எம்5 லைட் சாதனம் வெளிவந்துள்ளது, எனவே இது சிறந்த ஆடியோ அம்சத்தை வெளிப்படுத்தும். குறிப்பாக குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

மீடியாபேட் எம்5 லைட் மாடலில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Huawei MediaPad M5 Lite Pre-Booking Live and First Sale Starts March 13 at 12 PM : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X