ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் உடன் ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 8.0.!
இந்த சாதனம் 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 1200x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. அட்ரீனோ 505 உடன் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 உடனான 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ப்ராசசர் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது.
கடந்த வாரம், ஹூவாய் அதன் மூன்று மாறுபாடுகளிலான ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 10 டேப்ளெட்தனை அறிமுகம் செய்தது. 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் நினைவகம், அதே 3ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவகம் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவகம் என மொத்தம் 3 மாதிரிகளில் இந்த சாதனம் வெளியாகியுள்ளது.
தற்போது ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் மீடியாபேட் எம் 3 லைட் 8.0 என்றழைக்கப்படும் இன்னொரு டேப்ளெட் அறிமுகமாகியுள்ளது. இது மீடியாபேட் எம்3 லைட் 10.0 போலவே சிறந்த ஒலி தரத்திற்கான ஹார்மோன் கார்டன் ஆடியோவுடன் வருகிறது. தங்கம், வெள்ளி மற்றும் சாம்பல் வண்ண வகைகளில் வருகிறது.

மேலும் இந்த சாதனம் 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 1200 x 1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. அட்ரீனோ 505 உடன் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 உடனான 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ப்ராசசர் மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது. இந்த டேப்ளெட் 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இரண்டுமே மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்புகளை வழங்குகின்றன.
இந்த ஹூவாய் மீடியாபேட் எம்3 லைட் 8.0 ஆனது அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தில் இஎம்யூஐ 5.1 உடன் இயங்குகிறது. டிஸ்பிலேவிற்கு கீழே ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது.
ஒளியியல் துறையை பொறுத்தமட்டில் பின்புறம் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கம் ஒரு 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது உடன் இக்கருவி சக்தி வாய்ந்த 4,800 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தம்மட்டில் 4ஜி / எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.0, மைக்ரோயூஎஸ்பி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் வெளியீட்டு விவரங்களை ஹூவாய் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications