Home
Tablets

இந்தியாவில் அறிமுகமானது புது HUAWEI டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. என்ன விலை?

ஹூவாய் (HUAWEI) நிறுவனம் ஹூவாய் மேட்பேட் 11.5 (HUAWEI MATEPAD 11.5) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 10100எம்ஏஎச் பேட்ரி, குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளியாகி உள்ளது. இப்போது ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

ஹூவாய் மேட்பேட் 11.5 அம்சங்கள் (HUAWEI MATEPAD 11.5 Specifications): 11.5-இன்ச் 2.5கே ஹூவாய் பேப்பர்மேட் டிஸ்பிளே (HUAWEI PaperMatte Display) உடன் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகி உள்ளது. 2456 × 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 16.7 மில்லியன் கலர்ஸ், TÜV Rheinland சான்றிதழ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது புது HUAWEI டேப்லெட்.. என்ன விலை?

சக்திவாய்ந்த கிரின் டி82 (Kirin T82) சிப்செட் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

13எம்பி ஆட்டோ போகஸ் (auto focus) ரியர் கேமரா உடன் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

HUAWEI Histen 9.0 சவுண்ட் எஃபெக்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (quad speakers) உடன் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். 2 மைக்ரோபோன்கள் ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் HarmonyOS 3.1 மூலம் இந்த சாதனம் இயங்குகிறது.

10100mAh பேட்டரி உடன் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்தியாவில் அறிமுகமானது புது HUAWEI டேப்லெட்.. என்ன விலை?

வைஃபை 6 802.11ஏ, புளூடூத் 5.2 எல்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஸ்மார்ட் கீபோர்டு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட்.

ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலின் விலை ரூ.43,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் விற்பனைக்கு வரும். ஸ்பேஸ் கிரே மற்றும் வயலட் நிறங்களில் இந்த புதிய டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
HUAWEI MATEPAD 11.5 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X