அசத்தலான ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.!

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் சாதனத்தில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

|

சீனாவில் தற்சமயம் அசத்தலான ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் ஹானர் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் வரும் டிசம்பர் 25-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.!

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் மாடல் எல்டிஇ பதிப்புடன் வெளிவருகிறது, மேலும் இந்த சாதனம் சில்வர் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட்
சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் 8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை ஆதரவாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக் கொண்டுள்ளது. பின்பு நீர் மற்றும் மாசு தடுப்புக்கு வேண்டி ஐபி67-சான்றிதழ்
உடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ்
ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இயங்குதளம்:

இயங்குதளம்:

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் சாதனத்தில் ஆக்டோ-கோர் கிரிண் 659 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் எடைப் பொறுத்தவரை 465 கிராம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் சாதனத்தில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.17,289-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Waterplay 8 LTE version launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X