ஆர்டர் அதிருது.. வெறும் ரூ.9000 பட்ஜெட்ல 11.5 இன்ச் டிஸ்பிளே.. 7250mAh பேட்டரி.. மெட்டல் பாடி.. யாரு விடுவா?
அமேசான் தள்ளுபடியில் வெறும் ரூ.9000 விலைக்கு 11.5 இன்ச் டிஸ்பிளே, 7250mAh பேட்டரி, மெட்டல் பாடி, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஆட்டோ போகஸ் கேமரா போன்ற அம்சங்களை கொண்ட ஹானர் பேட் எக்ஸ் 9 (Honor Pad X9) டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹானர் பேட் எக்ஸ் 9 அம்சங்கள் (Honor Pad X9 Specifications): இந்த ஹானர் டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 685 6nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

அதோடு மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7,250mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் பேட்டரியோடு சேர்த்து, 495 கிராம் எடைக் கொண்டுள்ளது. இதை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 13 மணி நேரத்துக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும்.
இந்த ஹானர் டேப்லெட்டில் 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன் வருகிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. கண்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு, லெவல் லோவ் ப்ளூ லைட் சர்டிபிகேஷன் (Level Low Blue Light Certification) கொண்டுள்ளது.
இந்த ஹானர் டேப்லெட்டின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் டூயல் பேண்ட் வை-பை 5 (Dual Band Wi-Fi 5) வருகிறது. இந்த மாடலில் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. அதோடு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த டேப்லெட்டில் 5 எம்பி ஆட்டோ போகஸ் ரியர் கேமரா வருகிறது. இதில் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 5 எம்பி ஃபிக்சட் போகஸ் செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் செல்பீ மிரரிங் (Selfie Mirroring) சப்போர்ட் வருகிறது. அதேபோல மெயின் கேமராவில் எச்டிஆர் (HDR), டைம் லேப்ஸ் (Time-Lapse) போன்ற மோட்கள் வருகின்றன.
இந்த டேப்லெட்டில் 6 ஸ்பீக்கர்கள் மற்றும் 1 மைக் வருகிறது. அதோடு ஹானர் ஹிஸ்டென் (HONOR Histen) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிலரேட் சென்சார் (Accelerate Sensor) மற்றும் கிரேவிட்டி சென்சார் (Gravity Sensor) பயன்படுத்தப்பட்டுள்ளது. 267.3 மிமீ நீளம், 167.4 மிமீ உயரம், 6.9 அகலம் கொண்டிருக்கிறது.
ஸ்பேஸ் கிரே (Space Grey) கலரில் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 64 ஜிபி மாடலுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடியை அமேசான் அறிவித்துள்ளது.

இந்த டேப்லெட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் (ICICI Bank Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.999 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ரூ.9,450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட்டை வெறும் ரூ.8,999க்கு வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications