11.5-இன்ச் டிஸ்பிளே: முரட்டுத்தனமான டேப்லெட்-ஐ இந்தியாவுக்கு கொண்டுவரும் HONOR.! ரெடியா இருங்க..
ஹானர் நிறுவனம் தற்போது சியோமி நிறுவனத்திற்குப் போட்டிக் கொடுக்கும் வகையில் அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஹானர் டேப்லெட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம்.
அதாவது ஹானர் நிறுவனம் பேட் எக்ஸ்9 HONOR Pad X9 எனும் டேப்லெட் மாடலை தான் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த டேப்லெட் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த புதிய டேப்லெட் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் மாடல் அமேசான் வழியே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு இப்போது இணையத்தில் வெளியான ஹானர் நிறுவனம் பேட் எக்ஸ்9 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் ஆனது 11.5-இன்ச் 2கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 86% ஸ்க்ரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் வெளிவரும். அதேபோல் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட்.
ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் மாடலில் 4ஜிபி ரேம், 3ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புத்தம் புதிய ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் மாடல். பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ஆனால் 5எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் 7250எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் 13 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும். மேலும் 2.5 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் ஆனது ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் 6 ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு டூயல் பேண்ட் வைஃபை 5, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட்.
ஹானர் பேட் எக்ஸ்9 ப்ரோ மாடலின் எடை 459 கிராம் ஆகும். அதேபோல் பர்ப்பிள், ஸ்டார் கிரே, ஸ்கை ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் இந்த ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் அறிமுகமாகும். இந்தியாவில் ஹானர் பேட் எக்ஸ்9 டேப்லெட் ஆனது இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








