Home
Tablets

அறிமுகமானது புது ஹானர் டேப்லெட்.. 10,100mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் (Honor Pad X9 Max) எனும் டேப்லெட் மாடலை தற்போது இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் அம்சங்கள் (Honor Pad X9 Max Specifications): 13-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2500 x 1560 பிக்சல்ஸ், 700 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அறிமுகமானது புது ஹானர்  டேப்லெட்.. 10,100mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென் 2 சிப்செட்(Snapdragon 6s 4G Gen 2 chipset)உடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடலில் உள்ளன.

ஆட்டோ போகஸ் ஆதரவு கொண்ட 5எம்பி ரியர் மற்றும் செல்பி கேமரா உடன் ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடல் வெளியாகி உள்ளது. IMAX Enhanced ஆதரவுடன் கூடிய நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் டேப்லெட். எனவே இந்த சாதனம் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10,100mAh பேட்டரி உடன் ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45Wஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அறிமுகமானது புது ஹானர்  டேப்லெட்.. 10,100mAh பேட்டரி.. எந்த மாடல்?

வைஃபை 5, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடலில் உள்ளன. மேலும் Honor Magic Pencil 4s ஸ்டைலஸ் மற்றும் ஸ்மார்ட் ப்ளூடூத் கீபோர்டுக்கான ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். அதுவும் ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடலின் எடை 618 கிராம் ஆகும். கிரே நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

ஹானர் பேட் எக்ஸ்9 மேக்ஸ் மாடலின் ஆரம்ப விலை $470 (இந்திய மதிப்பில் ரூ.45,366)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo credits: notebookcheck, gizmochina, Honor

Best Mobiles in India

English summary
Honor Pad X9 Max with 10100mAh battery launched in UK: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X