Honor அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பேட் எக்ஸ்8பி மாடலை அறிமுகம் செய்துள்ளது. 10100எம்ஏஎச் பேட்டரி, குவாட் ஸ்பீக்கர்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் பேட் எக்ஸ்8பி அம்சங்கள் (Honor Pad X8b Specifications): 11-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உடன் ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1200 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்(Snapdragon 680 chip) உடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
5எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி ஆட்டோ போகஸ் கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
மேஜிக்ஓஎஸ் 10 (MagicOS 10) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த புதிய ஹானர் மாடலில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.
ஹானர் சவுண்ட்-டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்பீக்கர்கள் இந்த ஹானர் பேட் எக்ஸ்8பி மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் வைஃபை 5, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் எடை 496 கிராம்.

10,100mAh பேட்டரி உடன் ஹானர் பேட் எக்ஸ்8பி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் ஸ்பேஸ் கிரே நிறத்தில் இந்த புதிய மாடல் வெளிவந்துள்ளது.
ஆனால் தற்போது ஹானர் பேட் எக்ஸ்8பி மாடல் சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை 649 SAR (இந்திய மதிப்பில் ரூ.15,671)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








