Home
Tablets

காத்திருப்பு ஓவர்.. ரூ.12,999 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 128GB மெமரி.. அறிமுகமானது புதிய HONOR டேப்லெட்..

ஹானர் நிறுவனம் நேற்று இந்தியாவில் ஹானர் பேட் எக்ஸ்8ஏ (HONOR Pad X8a ) மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக குவாட் ஸ்பீக்கர்கள், 8300எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். இப்போது ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் பேட் எக்ஸ்8ஏ அம்சங்கள் (HONOR Pad X8a Specifications): ஹானர் பேட் எக்ஸ்8ஏ ஆனது 11-இன்ச் ஃபுல் எச்டி டிஎப்டி எல்சிடி (FHD TFT LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1200 x 1920 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

காத்திருப்பு ஓவர்.. அறிமுகமானது புதிய ஹானர் டேப்லெட்..

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஹானர் டேப்லெட். எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எக்ஸ்8ஏ டேப்லெட். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக 4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபிஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்று கூறப்படுகிறது.

5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் பேட். ஆனால் 5எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

இந்த ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடலில் 8300mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் குவாட் ஸ்பீக்கர்களுடன் (quad speakers) வருகிறது இந்த புதிய டேப்லெட். மேலும் ஒரு மைக்ரோபோன் ஆதரவும் இதில் உள்ளது. அதேபோல் 495 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல்.

டூயல் பேண்ட் வைஃபை 5 (Dual Band Wi-Fi 5), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல். பின்பு இந்த சாதனத்தில் எடை 459 கிராம் ஆகும். தற்போது ஸ்பேஸ் கிரே (Space Gray) நிறத்தில் இந்த ஹானர் டேப்லெட் வெளிவந்துள்ளது.

ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல் ஆனது ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் இந்த புதிய ஹானர் டேப்லெட் மாடலை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஹானர் டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
HONOR Pad X8a with 128GB Storage launched: check specifications price, sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X