ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 8300mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. அறிமுகமானது புதிய Honor டேப்லெட்..
ஹானர் நிறுவனம் தனது புதிய டேப்லெட் மாடலை கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஹானர் நிறுவனம் தனது ஹானர் பேட் 8எக்ஸ்ஏ (Honor Pad X8a) எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பேட் 8எக்ஸ்ஏ அம்சங்கள் (Honor Pad X8a Specifications): ஹானர் பேட் 8எக்ஸ்ஏ ஆனது 11-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1200 x 1920 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடலில் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
4ஜிபி ரேம் (4ஜிபி ரேம் டர்போ) மற்றும் 128ஜிபிஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடல். ஆனால் 13எம்பி ரியர் கேமராவுடன் இந்த டேப்லெட் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடல்.
ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடலில் 8300mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக குவாட் ஸ்பீக்கர்களுடன் (quad speakers) வருகிறது இந்த புதிய டேப்லெட். மேலும் ஒரு மைக்ரோபோன் ஆதரவும் இதில் உள்ளது. அதேபோல் 495 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல்.
வைஃபை 802.11, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடல். பின்பு இந்த சாதனத்தில் எடை 459 கிராம் ஆகும். தற்போது ஸ்பேஸ் கிரே (Space Gray) நிறத்தில் இந்த ஹானர் டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனால் விரைவில் இந்த டேப்லெட் பல்வேறு நிறங்களில் வெளியாகும். குறிப்பான இந்த டேப்லெட் மாடல் அனைத்து சிறப்பான வசதிகளுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது.
அதன்படி ஹானர் பேட் 8எக்ஸ்ஏ மாடல் ஆனது ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் இணையதளம் வழியாக இந்த புதிய டேப்லெட் வாங்குவதற்குக் கிடைக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் இந்த டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications