Home
Tablets

பட்ஜெட் விலையில் புதிய டேப்லெட் வாங்க ஐடியா இருக்குதா? அப்போ இந்த புதிய டேப்லெட்-ஐ பாருங்க..

இந்தியாவில் சியோமி, மோட்டோரோலா உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான டேப்டெல் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஹானர் நிறுவனமும் தனது புத்தம் புதிய டேப்லெட் மாடலை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் பேட் எக்ஸ்8 (4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ்) மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இதன் 3ஜிபி ரெம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிக ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய டேப்லெட் வாங்க ஐடியா இருக்குதா?

குறிப்பாக இந்த ஹானர் பேட் எக்ஸ்8 (HONOR Pad X8) மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய ஹானர் பேட் எக்ஸ்8 மாடல் ஆனது 10.1-இன்ச் ஃபுல் எச்டி 224 PPI IPS டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920×1200 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஹானர் பேட் எக்ஸ்8 மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12என்எம் பிராசஸர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யுஐ 6.1 மூலம் இந்த புதிய டேப்லெட் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் புதிய டேப்லெட் வாங்க ஐடியா இருக்குதா?

தற்போது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் பேட் எக்ஸ்8 மாடல். அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்8 மாடல் வெளிவந்துள்ளது. இந்த டேப்லெட் மாடலில் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளன. ஆனால் கேமராவில் மட்டும் சொதப்பி உள்ளது ஹானர் நிறுவனம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமராவுடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்8 மாடல் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

5100 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்8 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் யுஎஸ்பி டைப் சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல்.

பட்ஜெட் விலையில் புதிய டேப்லெட் வாங்க ஐடியா இருக்குதா?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் பேட் எக்ஸ்8 மாடல் புளூ ஹவர் நிறத்தில் கிடைக்கிறது. பின்பு இதன் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் பேட் எக்ஸ்8 மாடலின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
HONOR Pad X8 with 4GB RAM launched in India priced at Rs 11,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X