தரமான செய்கை.. ரூ.10,347 பட்ஜெட்ல 7020mAh பேட்டரி.. அறிமுகமானது புது Honor டேப்லெட்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது ஹானர் பேட் எக்ஸ்7 (Honor Pad X7) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பேட் எக்ஸ்7 அம்சங்கள் (Honor Pad X7 Specifications): 8.7-இன்ச் டிஎப்டி எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1340 x 800 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 8 பிட் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராஸசர் (Qualcomm Snapdragon 680 processor) உடன் இந்த புதிய ஹானர் பேட் எக்ஸ்7 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் பேட் எக்ஸ்7 மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த புதிய ஹானர் பேட் எக்ஸ்7 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் பல கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும்.
ஹானர் பேட் எக்ஸ்7 மாடல் 42 நீடித்து நிலைக்கும் சோதனைகளில் தேர்ச்சி பெற்றதாகக் கூறுகிறது ஹானர் நிறுவனம். இதில் டிராப் டெஸ்ட், ஸ்டீல் பால் இம்பாக்ட், தீவிர வெப்பநிலை சோதனை உள்ளிட்ட பல சோதனைகள் அடங்கும். மேலும் 365 கிராம் எடை கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் டேப்லெட் மாடல்.
7020mAh பேட்டரி உடன் ஹானர் பேட் எக்ஸ்7 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W வயர்டு சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
ஆனால் ஹானர் பேட் எக்ஸ்7 மாடல் ஆனது தற்போது சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஹானர் பேட் 7 மாடலின் விலை SAR 449 (இந்திய மதிப்பில் ரூ.10,347) ஆகும்.


Click it and Unblock the Notifications








