Home
Tablets

ஹானர் அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பேட் எக்ஸ்10 (Honor Pad X10) மாடலை இப்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த ஹானர் பேட் 10எக்ஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் பேட் எக்ஸ்10 அம்சங்கள் (Honor Pad X10 Specifications): 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ஹானர் பேட் எக்ஸ்10 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1200 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 563 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் , ஃப்ளிக்கர்-ஃப்ரீ சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

ஹானர் அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் உடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்10 மாடல் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

MagicOS சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்10 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5எம்பி ரியர் கேமரா உடன் இந்த ஹானர் பேட் எக்ஸ்10 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஹானர் பேட் 10எக்ஸ் மாடலில் உள்ளன.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ஹானர் பேட் எக்ஸ்10 மாடலை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

10,100mAh பேட்டரி உடன் ஹானர் பேட் எக்ஸ்10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் 22 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக், 123 மணி நேரம் வரை மியூசிக், 97 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைம்-ஐ வழங்குகிறது. அதாவது அந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

ஹானர் அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த டேப்லெட் கீழே விழுவதையும் அழுத்தத்தையும் தாங்கும் திறனுக்காக SGS-இன் ஃபைவ் ஸ்டார் சான்றிதழையும் பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் எடை 499 கிராம் ஆகும். ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டாரி கிரே நிறங்களில் இந்த புதிய ஹானர் பேட் 10எக்ஸ் மாடலை வாங்க முடியும்.

ஹானர் பேட் எக்ஸ்10 விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் பேட் எக்ஸ்10 மாடலின் விலை 1,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.17,655)
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஹானர் பேட் எக்ஸ்10 மாடலின் விலை 1,599 yuan (இந்திய மதிப்பில் ரூ.21,732)
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் பேட் எக்ஸ்10 மாடலின் விலை 1,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.24,451)

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad X10 with 10100mAh battery launched : check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X