யாரு விடுவா சொல்லுங்க.. 10100mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. புதிய ஹானர் டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ (HONOR Pad GT2 Pro) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த டேப்லெட் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 10100mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ அம்சங்கள் (HONOR Pad GT2 Pro Specifications): 12.5-இன்ச் 3கே IMAX Enhanced எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் விவிட் (HDR Vivid), 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

3.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென 3 4என்எம்(3.3GHz Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் உடன் ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. மேலும் மேஜிக்ஓஎஸ் 9.0.1 (MagicOS 9.0.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்டெல் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
13எம்பி ரியர் கேமராவுடன் இந்த ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதுவும் 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial audio) ஆதரவு கொண்ட 8 ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
10100mAh பேட்டரி வசதியுடன் ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இரண்டு நாட்களுக்கு இந்த டேப்லெட் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.

வைஃபை 7, புளூடூத் 5.4, யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் இந்த டேப்லெட் மாடலின் எடை 532 கிராம் ஆகும். கிரிஸ்டல் ஒயிட் மற்றும் பேண்டம் கிரே நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.
சீனாவில் ஜூலை 28-ம் தேதி ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ மாடல் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த சாதனத்தில் ஆரம்ப விலை ரூ.30,030 ஆகும். அதேபோல் இந்த ஹானர் பேட் ஜிடி2 ப்ரோ மாடல் ஆனது விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








