Home
Tablets

சாரு வேற ரகம்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 10050mAh பேட்டரி.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த டேப்லெட்?

கேமிங் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படி 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 3D ஸ்பாஷியல் ஆடியோ கொண்ட 8 ஸ்பீக்கர்கள், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10050mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஹானர் பேட் ஜிடி ப்ரோ (HONOR Pad GT Pro) டேப்லெட் வெளியாகி இருக்கிறது. இதுபோக 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த ஹானர் மாடலின் விவரங்கள் இதோ.

ஹானர் பேட் ஜிடி ப்ரோ அம்சங்கள் (HONOR Pad GT Pro Specifications): கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் மற்றும் குவாலிட்டி கொடுக்கும்படி டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. 3K ரெசொலூஷன் கொண்ட 12.3 இன்ச் (3000 x 1920 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) அவுட்புட் கிடைக்கிறது.

சாரு வேற ரகம்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 10050mAh பேட்டரி டேப்லெட்!

இதுபோக 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. பிரத்யேகமாக சூப்பர் ஃபிரேம் என்ஜின் (Super Frame Engine) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹானர் பேட் ஜிடி ப்ரோ டேப்லெட்டில் 4 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டேப்லெட் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை கொடுக்க ஆடியோவில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது.

3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) கொண்ட 8 ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதிகப்படியான பேக்கப் கொடுக்கும் பேட்டரி சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது. 66W ஹானர் சூப்பர்சார்ஜ் சப்போர்ட் (HONOR SuperCharge Support) கொண்ட 10050mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி கொண்டிருந்தும் 5.8 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது.

555 கிராம் எடை வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,499ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,860ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,400ஆகவும் இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.40,120ஆக இருக்கிறது.

இந்த ஹானர் பேட் ஜிடி ப்ரோ மாடலில் மூன் ஷேடோ ஒயிட் (Moon Shadow White), ஜிடி ப்ளூ (GT Blue) மற்றும் ஸ்டார் பிளாக் (Star Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. அங்கு விற்பனையும் தொடங்கிவிட்டது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அடுத்த சில வாரங்களில் இந்த டேப்லெட்டை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Pad GT Pro With 16GB RAM 10050mAh Battery 13MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X