Home
Tablets

விஸ்வரூப மாடல்.. ரூ.23,270 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB ரேம்.. எந்த டேப்லெட்?

வெறும் ரூ.23,270 விலைக்கு 120Hz டிஸ்பிளே, 4K கேமரா, 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 8300mAh பேட்டரி, 8 ஸ்பீக்கர்கள் போன்ற மிரள வைக்கும் அம்சங்களோடு ஹானர் பேட் 9 (HONOR Pad 9) டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

ஹானர் பேட் 9 அம்சங்கள் (HONOR Pad 9 Specifications): இந்த ஹானர் டேப்லெட் பிரீமியம் ஸ்மார்ட்போனுக்கு நிகரான சிப்செட், ரேம் மற்றும் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஆகவே, 12.1 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) டிஎப்டி (TFT) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு மல்டி-டச் (Multi Touch) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும்.

பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB ரேம்.. எந்த டேப்லெட்?

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 249 பிபிஐ வருகிறது. அதோடு 1.07 பில்லியன் கலர் மற்றும் சாப்ட் லைட் மேட் (Soft Light Matte) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் சிப்செட் வருகிறது.

அதோடு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) கொண்டுள்ளது. இந்த ஹானர் பேட் 9 டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் ஹானர் பேட் 9 சாப்ட் லைட் எடிஷன் (HONOR Pad 9 Soft Light Edition) வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த டேப்லெட்டில் சிங்கிள் ரியர் கேமரா செட்டப் (Single Rear Camera Setup) வருகிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா கொண்டிருக்கிறது.

இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு போர்ட்ராய்டு (Portrait), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் வருகின்றன. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஃபுஎல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவை போலவே பேட்டரி செட்டப்பும் மிரட்டலாகவே இருக்கிறது.

பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB ரேம்.. எந்த டேப்லெட்?

ஆகவே, 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8300mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 8 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்க கூடியது. இந்த பேட்டரியோடு சேர்த்து 555 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல சாப்ட் லைட் எடிஷன் வேரியண்ட் 559 கிராம் எடை கொண்டிருக்கிறது. 6.96 மிமீ தடிமன் கொண்டுள்ளது.

இந்த ஹானர் பேட் 9 டேப்லெட்டில் மொத்தமாக 8 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆடியோ குவாலிட்டி மிரட்டலாகவே இருக்கும். அதேபோல டூயல் மைக்ரோபோன் (Dual Microphones) வருவதால், வாய்ஸ் காலிங் அனுபவமும் பக்காவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) ஆகியவை வருகிறது.

அதோடு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) மற்றும் ஓடிஜி (OTG) சப்போர்ட் வருகிறது. இந்த ஹானர் பேட் 9 டேப்லெட்டில் வைட் (White), ப்ளூ (Blue) மற்றும் கிரே (Gray) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.18,610ஆகவும், 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.20,940ஆகவும் இருக்கிறது.

அதேபோல 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.23,270ஆகவும், 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.26,280ஆகவும், சாப் லைட் எடிஷன் வேரியண்ட்டின் விலை ரூ.25,080ஆகவும் இருக்கிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாடுகளில் விரைவில் அறிமுகமாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR Pad 9 With 8300mAh Battery, 12GB RAM Under Rs 20000 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X