Home
Tablets

மார்க்கெட்டே திணறப்போகுது.. 8300mAh பேட்டரி.. 35W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் ஹானர் டேப்லெட்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் ஏற்கனவே சீனாவில் ஹானர் பேட் 9 எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த ஹானர் பேட் 9 மாடல் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது தற்போது BIS சான்றிதழ் தளத்தில் ஹானர் பேட் 9 மாடல் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் ஹானர் பேட் 9 ஆனது இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும். இப்போது ஹானர் பேட் 9 மாடலின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. இந்தியாவுக்கு வரும் ஹானர் டேப்லெட்..

ஹானர் பேட் 9 அம்சங்கள் (Honor Pad 9 specifications): 12.1 இன்ச் டிஎப்டி (TFT) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 டேப்லெட் இந்தியாவில் அறிமுகாகும். இதுவொரு மல்டி-டச் (Multi Touch) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்இ சாப்ட் லைட் மேட் (Soft Light Matte) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் ஹானர் பேட் 9 வெளிவரும். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் பேட் 9.

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 9 மாடல். இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு போர்ட்ராய்டு (Portrait), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் வருகின்றன. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.

8300எம்ஏஎச் பேட்டரி (8300mAh battery) வசதியைக் கொண்டுள்ளது ஹானர் பேட் 9 மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (35W fast charging) வசதியும் உள்ளது. அதேபோல் இந்த பேட்டரி தொடர்ந்து 8 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்க கூடியது. டேப்லெட்டில் மொத்தமாக 8 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஆடியோ குவாலிட்டி மிரட்டலாகவே இருக்கும்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. இந்தியாவுக்கு வரும் ஹானர் டேப்லெட்..

வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டைப்-சி (USB Type-C), ஓடிஜி (OTG) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளன இந்த ஹானர் பேட் 9 மாடல். டூயல் மைக்ரோபோன் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் டேப்லெட்.

அஸூர் (Azure) , ஒயிட் (White) மற்றும் கிரே ( Gray) நிறங்களில் ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும். மேலும் ஹானர் பேட் 9 மாடல் ஆனது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹானர் டேப்லெட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad 9 spotted on BIS certification site : India launch imminent: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X