Home
Tablets

மிரண்டுபோன மார்க்கெட்.. 10050mAh பேட்டரி.. 256GB மெமரி.. ஹானர் 5ஜி டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் ஹானர் 200 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தபின்பு ஹானர் பேட் 9 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் மாடல் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஹானர் பேட் 9 ப்ரோ அம்சங்கள் (Honor Pad 9 Pro specifications): 12.1-இன்ச் டிப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 9 ப்ரோ மாடல். மேலும் 2560 x 1600 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1.7 பில்லியன் கலர்ஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) உள்ளிட்ட பல்வெறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

மிரண்டுபோன மார்க்கெட்..  ஹானர் 5ஜி டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஹானர் பேட் 9 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட் (MediaTek Dimensity 8100 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 9 ப்ரோ மாடல். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

13எம்பி ரியர் கேமரா வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

10050எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் பேட் 9 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இந்த புதிய டேப்லெட்டில் ஆடியோவிற்காக 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்வீட்டர்கள் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும். மேலும் 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, டைப்-சி போர்ட் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக 5ஜி ஆதரவுடன் இந்த ஹானர் பேட் 9 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

மிரண்டுபோன மார்க்கெட்..  ஹானர் 5ஜி டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்?

ஸ்டார்ரி கிரே மற்றும் ஸ்கை ப்ளூ நிறங்களில் ஹானர் பேட் 9 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹானர் பேட் 9 ப்ரோ மாடல் ஆனது தற்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இந்த டேப்லெட் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என் கூறப்படுகிறது.

குறிப்பாக ஹானர் பேட் 9 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 2499 Yuan (இந்திய மதிப்பில் ரூ.28,741)ஆக உள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஹானர் நிறுவனம் விரைவில் இந்தியாவில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor Pad 9 Pro with 144Hz display launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X