அதிர வைக்கும் விலை.. 8300mAh பேட்டரி.. 13MP கேமரா.. அறிமுகமானது ஹானர் டேப்லெட்.. எந்த மாடல்?
ஹானர் நிறுவனம் கடந்த ஆண்டு சீனாவில் ஹானர் பேட் 9 எனும் டேப்லெட் மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த ஹானர் பேட் 9 ஆனது இன்று உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது ஹானர் பேட் 9 ஆனது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நாடுகளில் ரூ.31,528 விலையில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இதே டேப்லெட் மாடல் ஆனது இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது ஹானர் பேட் 9 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் பேட் 9 அம்சங்கள் (Honor Pad 9 specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் ஹானர் பேட் 9 வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் பேட் 9.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
அதேபோல் 12.1 இன்ச் டிஎப்டி (TFT) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவொரு மல்டி-டச் (Multi Touch) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர், சாப்ட் லைட் மேட் (Soft Light Matte) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த ஹானர் பேட் 9 மாடல் 13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு போர்ட்ராய்டு (Portrait), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் வருகின்றன. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.
8300எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் பேட் 9 மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (35W fast charging) வசதியும் உள்ளது. அதேபோல் இந்த பேட்டரி தொடர்ந்து 8 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்க கூடியது. டேப்லெட்டில் மொத்தமாக 8 ஸ்பீக்கர்கள்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே ஆடியோ குவாலிட்டி மிரட்டலாகவே இருக்கும்.

வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டைப்-சி (USB Type-C), ஓடிஜி (OTG) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ஹானர் பேட் 9 மாடல். டூயல் மைக்ரோபோன் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் டேப்லெட்.
அஸூர் (Azure) , ஒயிட் (White) மற்றும் கிரே ( Gray) நிறங்களில் ஹானர் பேட் 9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஹானர் டேப்லெட் ஆனது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








