இப்படி ஒரு Tablet-க்கு தான் இங்க பல பேர் வெயிட்டிங்.. 8300mAh பேட்டரி.. 512GB மெமரி.. என்ன மாடல்?
ஹானர் நிறுவனத்தின் டேப்டெல் மாடல்கள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சாம்சங், சியோமி, ஒப்போ நிறுவனங்களின் டேப்லெட்களை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகிறது ஹானர் நிறுவனத்தின் டேப்டெல் மாடல்கள்.
இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் ஒரு டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் டிசம்பர் 21-ம் தேதி ஹானர் பேட் 9 எனும் டேப்லெட் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஹானர் நிறுவனம். ஆனாலும் இந்த ஹானர் பேட் 9 மாடல் விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஹானர் பேட் 9 மாடல் உடன் ஹானர் 90 ஜிடி எனும் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஹானர் பேட் 9 மாடலின் விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஹானர் பேட் 9 அம்சங்கள் (Honor Pad 9 specifications): 12-1-இன்ச் பேப்பர் eye-protecting சாப்ட் லைட் ஸ்கிரீன் உடன் ஹானர் பேட் 9 அறிமுகமாகும். குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் AG கிளாஷ் டெக்னாலஜி ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) வசதியுடன் இந்த புதிய ஹானர் பேட் 9 சாதனம் அறிமுகமாகும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் மேஜிக் ஓஎஸ் 7.2 (Magic OS 7.2) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும்.
ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் இந்த ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த டேப்லெட் வெளிவரும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஹானர் பேட் 9 மாடலில் உள்ளன.

எட்டு ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது ஹானர் பேட் 9 மாடல். எனவே இந்த டேப்லெட் தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் இந்த புதிய ஹானர் டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.
8300எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இதன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் ஹானர் பேட் 9 ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








