Home
Tablets

கொஞ்சம் பொறுங்க.. 8300mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 12GB ரேம்.. இந்தியாவுக்கு வரும் Honor டேப்லெட்..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பேட் 9 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது அமேசான் இந்தியா (Amazon India) மைக்ரோசைட்-ல் இந்த ஹானர் பேட் 9 மாடல் காணப்பட்டுள்ளது.

எனவே வரும் வாரங்களில் இந்த அசத்தலான ஹானர் பேட் 9 மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாகத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 9 மாடல். மேலும் இந்த ஹானர் பேட் 9 டேப்லெட் மாடலின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க..இந்தியாவுக்கு வரும் Honor டேப்லெட்.. எந்த மாடல்?

ஹானர் பேட் 9 அம்சங்கள் (HONOR Pad 9 Specifications): தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியை கொண்டுள்ளது ஹானர் பேட் 9. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) வசதியுடன் இந்த டேப்லெட் இந்தியாவுக்கு வரும்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஹானர் பேட் 9மாடல் விற்பனைக்கு வரும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கொஞ்சம் பொறுங்க..இந்தியாவுக்கு வரும் Honor டேப்லெட்.. எந்த மாடல்?

இந்த ஹானர் பேட் 9 மாடல் 13எம்பி ரியர் கேமரா வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு போர்ட்ராய்டு (Portrait), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் வருகின்றன. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். டூயல் மைக்ரோபோன் ஆதரவு கொண்டு வெளிவரும் இந்த ஹானர் பேட் 9. அதேபோல் இந்த டேப்லெட் மாடல் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம். ஹானர் பேட் 9 மாடலில் எட்டு ஸ்பீக்கர்கள் உள்ளது.

12.1 இன்ச் டிஎப்டி (TFT) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் பேட் 9 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இதுவொரு மல்டி-டச் (Multi Touch) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.07 பில்லியன் கலர், சாப்ட் லைட் மேட் (Soft Light Matte) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கொஞ்சம் பொறுங்க..இந்தியாவுக்கு வரும் Honor டேப்லெட்.. எந்த மாடல்?

ஹானர் பேட் 9 மாடல் 8300எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (35W fast charging) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த பேட்டரி தொடர்ந்து 8 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்க கூடியது என நிறுவனம் கூறுகிறது.

ஹானர் பேட் 9 மாடலில் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டைப்-சி (USB Type-C), ஓடிஜி (OTG) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. அதேபோல் ஹானர் பேட் 9 மாடல் இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad 9 is confirmed to launch in India soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X