Home
Tablets

ரெண்டு லட்டு தின்ன ஆசையா? 8300mAh பேட்டரி.. 50MP கேமரா.. டிச.21-ல் வரும் Honor சாதனங்கள்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பேட் 9 மற்றும் ஹானர் 90 ஜிடி சாதனங்களை வரும் டிசரம் 21-ம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்த இரண்டு சாதனங்கள் விரைவில் இந்திய சந்தை மற்றும் உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹானர் பேட் 9 (Honor Pad 9) மற்றும் ஹானர் 90 ஜிடி (Honor 90 GT) ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த இரண்டு சாதனங்களின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெண்டு லட்டு தின்ன ஆசையா? டிச.21-ல் வரும் Honor சாதனங்கள்..

ஹானர் பேட் 9 அம்சங்கள்: 12.1-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த ஹானர் பேட் 9 எனும் டேப்லெட் அறிமுகமாகும். கண் பாதுகாப்பு என்று தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் டேப்லெட். அதேபோல் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் போன்றே கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 9 மாடல்.

ஒயிட், கிரீன், கிரே நிறங்களில் இந்த புதிய ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும். அதேபோல் 8 ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் பேட் 9 மாடல். எனவே இந்த டேப்லெட் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் டேப்லெட்.

குறிப்பாக 8300எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, மேஜிக் பென்சில், மேஜிக் கீபோர்டு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் பேட் 9 மாடல் அறிமுகமாகும். மேலும் இந்த ஹானர் டேப்டெல் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 90 ஜிடி அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) வசதியுடன் இந்த ஹானர் 90 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த போன்களில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் 90ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரெண்டு லட்டு தின்ன ஆசையா? டிச.21-ல் வரும் Honor சாதனங்கள்..

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஹானர் 90 ஜிடி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஹானர் 90 ஜிடி விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad 9 and Honor 90 GT will be launched on December 21: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X