இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் HONOR Pad 8: எங்கு வாங்கலாம்?
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹானர் நிறுவனம் ஒரு புதிய சாதனத்தை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. அதாவது இந்நிறுவனம் HONOR PAD 8 எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

எப்போது விற்பனை?
வரும் செப்டம்பர் 23-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையின் போது இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும். குறிப்பாக Blue Hour நிறத்தில் மட்டுமே இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் பேட் 8 மாடலின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஹானர் பேட் 8 டிஸ்பிளே
ஹானர் பேட் 8 மாடல் ஆனது 12.0-இன்ச் 2கே ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1200x1920 பிக்சல்ஸ், 5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ,350 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹானர் டேப்லெட் மாடல். குறிப்பாகஇதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அசத்தலான கேமரா
ஹானர் பேட் 8 ஆனது 5எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். பின்பு இந்த டேப்லெட் மாடலில் உள்ள கேமராக்கள் மூலம் 1080 பிக்சல்ஸ் வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் பிராசஸர்
புதிய ஹானர் பேட் 8 மாடலில் தரமான ஸ்னாப்டிராகன் 680 பிராஸசர் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் ஸ்னாப்டிராகன் பிராசஸர்.
குறிப்பாக Magic UI 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 8 மாடல். அதேபோல் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அருமையான பேட்டரி
7250 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஹானர் பேட் 8 மாடல். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் 22.5 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

கனெக்டிவிட்டி
டைப்-சி போர்ட், 4ஜி, வைஃபை 5, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் பேட் 8 மாடல். மேலும் இந்தியாவில் இந்த டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications