Honor அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10100mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் ஹானர் பேட் 20 (HONOR Pad 20) மாடலை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல் அனைத்து நாடுகளிலும் வெளியாகும். இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பேட் 20 அம்சங்கள் (HONOR Pad 20 Specifications): 12.1-இன்ச் 3கே டிஎப்டி எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் ஹானர் பேட் 20 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிஸ்பிளேவில் 1.07 பில்லியன் கலர்ஸ், டிசிஐ-பி3 வைடு கலர் காமட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 700 நிட்ஸ் HBM பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (4என்எம்) சிப்செட் உடன் ஹானர் பேட் 20 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஹானர் பேட் 20 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது.
MagicOS 10.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஹானர் பேட் 20 மாடல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் ஹானர் பேட் 20 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
6 ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் புதிய ஹானர் பேட் 20 மாடலில் உள்ளன. அதுவும் இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழஙகும். புளூடூத் 5.3, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஹானர் பேட் 10 மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் எடை 525 கிராம் ஆகும்.

10100எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் பேட் 20 மாடல் வெளியாகி உள்ளது. எனவே டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹானர் பேட் 20 மாடலின் ஆரம்ப விலை 2099 yuan (இந்திய மதிப்பில் ரூ.29,420) ஆக உள்ளது. வரும் மே 27-ம் தேதி சீனாவில் இந்த புதிய ஹானர் டேப்லெட் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications