Home
Tablets

10050mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. அறிமுகமானது புதிய ஹானர் 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பேட் 10 ப்ரோ (Honor Pad 10 Pro) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஹானர் பேட் 10 ப்ரோ அம்சங்கள் (Honor Pad 10 Pro Specifications): 11.5-இன்ச் 2.8கே எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் விவிட், 10-பிட் கலர்ஸ், 1920 x 1200 பிக்சல்ஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

10050mAh பேட்டரி.. அறிமுகமானது புதிய ஹானர் 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (Dimensity 8350 chipset) உடன் இந்த ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

MagicOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் இந்த ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஹானர் பேட் 10எக்ஸ் மாடலில் உள்ளன.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

10050mAh பேட்டரி உடன் ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்டெல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

DTS:X, IMAX என்ஹான்ஸ்டு மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த ஹானர் பேட் 10 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், 5ஜி, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

டிராகன் ஸ்னோ, காங்ஷான் கிரே மற்றும் லுஷான் பர்பிள் ஸ்மோக் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும். அதேபோல் ஹானர் பேட் 10 ப்ரோ மாடலின் விலை 2,700 yuan (இந்திய மதிப்பில் ரூ.37,000)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad 10 Pro with 10050mAh battery launched : check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X