புது ஹானர் டேப்லெட் அறிமுகம்.. 10,100mAh பேட்டரி.. 35W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பேட் 10 (Honor Pad 10) மாடலை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது இந்த புதிய ஹானர் பேட் 10 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஹானர் பேட் 10 அம்சங்கள் (Honor Pad 10 specifications): 12.1-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன இந்த ஹானர் பேட் 10 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2.5கே ரெசல்யூஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1.9 பில்லியன் கலர்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் வசதியுடன் இந்த ஹானர் பேட் 10 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜிக்ஒஎஸ் 9.0 (MagicOS 9.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த டேபலெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். ஸ்பாஷியல் ஆடியோ ஆதரவு கொண்ட 6 ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
8எம்பி ரியர் கேமராவுடன் இந்த புதிய ஹானர் பேட் 10 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
10,100mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் 10 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 35W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
வைஃபை 6, புளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் ஹானர் ஏஐ நோட்ஸ் (AI Honor Notes), ஏஐ நோட்ஸ் அசிஸ்டண்ட் (AI Notes Assistant), ஏஐ ரைட்டிங் டூல் (AI Writing tools) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் எடை 525 கிராம் ஆகும்.
சியான் (Cyan) மற்றும் கிரே (Gray) நிறங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் பேட் 10 மாடலின் ஆரம்ப விலை €399.90 (இந்திய மதிப்பில் ரூ.38,721) ஆகும்.


Click it and Unblock the Notifications








