ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் இன்று இந்தியாவில் இரண்டு புதிய டேப்ளெட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள மீடியாபேட் டி3 ஆனது ரூ.12,999/- என்றும் மறுகையில் உள்ள மீடியாபேட் டி3 10 சாதனத்தின் 2ஜிபி மற்றும் 3ஜிபி மாறுபாடு முறையே ரூ.14,999/- மற்றும் ரூ.16,999/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும் இந்த டேப்ளெட்களின் அம்சங்களை பொறுத்தமட்டில் இந்த இரண்டு சாதனங்களும் ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 செயல்திறன் உடனான அட்ரெனோ 308 ஜிபியூ கொண்டு இயங்கும்.
பேட்டரி.!
இரண்டு சாதனங்களும், 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளன. மேலும் இரண்டு டேப்ளெட்களுமே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்குகின்றன. மற்றும் 4800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.
திரை தீர்மானம்.!
மீடியாபேட் டி3 ஆனது 8 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே (1280 x 800 பிக்ஸல் திரை தீர்மானம்) கொண்டுள்ளது., 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு, மேலும் மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.
சேமிப்பு.!
மீடியாபேட் டி3 10 ஆனது 9.6 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே (1280 x 800 பிக்ஸல் திரை தீர்மானம்) கொண்டுள்ளது. இந்த சாதனம் ஒரு 2ஜிபி / 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள் சேமிப்பு மூலம் ஆதரிக்கபப்டுகிறது மேலேயும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.
அளவீட்டில்.!
இணைப்பு ஆதரவுகளின் முன், இந்த இரண்டு டாப்ளெட்களுமே 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், ஒற்றை சிம் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது அளவீட்டில் மீடியாபேட் டி3 ஆனது 211.07 x 124.65 x 7.95 மிமீ மற்றும் 350 கிராம் எடையுள்ளதாகவும், மறுகையில் மீடியாபேட் டி3 10 ஆனது 229.8 x 159.8 x 7.95 மிமீ மற்றும் 460 கிராம் எடையுள்ளதாகவும் இருக்கிறது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.