புதிய Honor டேப்லெட் அறிமுகம்.. 12450mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக்பேட் 3 (HONOR MagicPad 3) டேப்லெட் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த டேப்லெட் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது ஹானர் மேஜிக்பேட் 3 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஹானர் மேஜிக்பேட் 3 அம்சங்கள் (HONOR MagicPad 3 Specifications): 13.3-இன்ச் 3.2கே எல்சிடி (3.2K LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் மேஜிக்பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10, 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ஹானர் மேஜிக்பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மேஜிக் 9.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்தது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த ஹானர் மேஜிக்பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது. பின்பு இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஹானர் மேஜிக்பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 9எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) சப்போர்ட் கொண்ட 8 ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்டெல் மாடல் ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் டூயல் பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.3இ யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹானர் மேஜிக்பேட் 3 மாடலில் உள்ளன.

12450mAh பேட்டரி வசதியுடன் இந்த ஹானர் மேஜிக்பேட் 3 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் எடை 595 கிராம் ஆகும். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஹானர் மேஜிக்பேட் 3 மாடலின் ஆரம்ப விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.35,850) ஆகும். மூன்லைட் ஒயிட் (Moonlight White), ஃப்ளோட்டிங் கோல்ட் (Floating Gold) மற்றும் ஸ்டாரி கிரே (Starry Gray) நிறங்களில் இந்த ஹானர் டேப்லெட் வாங்க கிடைக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








