Home
Tablets

Honor ருத்ர தாண்டவம்.. 10050mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 1டிபி மெமரி.. 65W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக்பேட் 2 (HONOR MagicPad 2) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஒஎல்இடி டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் டேப்லெட். மேலும் இந்த புதிய ஹானர் மேஜிக்பேட் 2 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஹானர் மேஜிக்பேட் 2 அம்சங்கள் (HONOR MagicPad 2 Specifications): 12.3-இன்ச் 3கே ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு ஒஎல்இடி ((3K IMAX Enhanced OLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2880 x 1840 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 4320ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (4320Hz PWM dimming), டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), 1 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

Honor ருத்ர தாண்டவம்.. 10050mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் உடன் இந்த ஹானர் மேஜிக்பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட மென்பொருள் வசதியானது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ஹானர் மேஜிக்பேட் 2. அதேபோல் மேஜிக்ஓஎஸ் 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.

ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8 ஸ்பீக்கர்கள் மற்றும் 3D ஸ்பாஷியல் சவுண்ட் எபெக்ட் (3D Spatial Sound Effect) வசதி இதில் உள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவு கொண்ட 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஹானர் மேஜிக்பேட் 2 மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 9எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். மேலும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

10050எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக்பேட் 2 மாடல். எனவே இந்த டேப்லெட் வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் ஹானர் சூப்பர் சார்ஜ் சப்போர்ட் உள்ளது. எனவே இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

Honor ருத்ர தாண்டவம்.. 10050mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

டூயல் பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். மேலும் இந்த ஹானர் மேஜிக்பேட் 2 மாடலின் எடை 555 கிராம் ஆகும். குறிப்பாக டேப்லெட் உடன் ஹானர் மேஜிக்பேட் 2 புளூடூத் கீபோர்டு மற்றும் மேஜிக் பென்சில் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன் ஷேடோ ஒயிட் (moon shadow white), ஸ்டார்ரி ஸ்கை பிளாக் (starry sky black) மற்றும் ஸ்கை சீ ப்ளூ (sky sea blue) நிறங்களில் ஹானர் மேஜிக்பேட் 2 சாதனத்தை வாங்க முடியும்.

அதேபோல் ஹானர் மேஜிக்பேட் 2 ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹானர் மேஜிக்பேட் 2 மாடலின் விலை CNY 2899(இந்திய மதிப்பில் ரூ.33,390)-ஆக உள்ளது. வரும் ஜூலை 19-ம் தேதி இந்த டேப்லெட் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR MagicPad 2 Launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X