நான் ரெடிதான் வரவா? அறிமுகமானது புதிய HONOR டேப்லெட்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
ஹானர் நிறுவனம் தனது அசத்தலான டேப்லெட் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஹானர் மேஜிக்பேட் 13 என்று அழைக்கப்படும் டேப்லெட் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், தரமான கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் மேஜிக்பேட் 13 மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புத்தம் புதிய ஹானர் மேஜிக்பேட் 13 சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

13-இன்ச் 2.8கே டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக்பேட் 13 மாடல். மேலும் 2880 x 1840 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிர் 10 ஆதரவு மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஹானர் டேப்லெட்.
குறிப்பாக ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் மேஜிக்பேட் 13 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு MagicOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் மேஜிக்பேட் 13 மாடல்.
13எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ஹானர் மேஜிக்பேட் 13 மாடல். எனவே இந்த டேப்டெல் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 9எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஹானர் மேஜிக்பேட் 13 மாடல். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் 8 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன், 3டி ஸ்பேஷியல் ஆடியோ உள்ளிட்ட அட்டகாசமான வசதிகளுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

இந்த ஹானர் மேஜிக்பேட் 13 மாடலில் 10050 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஹானர் மேஜிக் கீபோர்டு, மேஜிக் பென்சில் 3 உள்ளிட்ட வசதிகளுடன் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டூயல் பேண்ட் வைஃபை 6, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். பின்பு ஸ்கை ப்ளூ, ஸ்டார் கிரே மற்றும் மூன்லைட் நிறங்களில் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஹானர் மேஜிக்பேட் 13 மாடலின் ஆரம்ப விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,330).


Click it and Unblock the Notifications








