விரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட்.!
ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் சாதனம் 6660எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. அதன்பின்பு விரைவு சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஹானர் நிறுவனம். மேலும் இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என ஹானர் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் மாடல் பொதுவாக டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு முக்கிய சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் பொறுத்தவரை 10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.அதன்பின்பு 1920 ஒ 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவரும்.
இக்கருவி 2.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரண் 659 செயலியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு மாலிடி830 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த சாதனத்தின் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் சாதனத்தில் 8எம்பி டூயல் ரியர் கேமார பொறுத்தப்பட்டுள்ளது எனறும் பின்பு 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது என்றும் ஹானர் நிறுவனம் சார்பாக தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட் சாதனம் 6660எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. அதன்பின்பு விரைவு சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications