தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் பிக்சல் டேப்லெட்: எப்போது அறிமுகம் தெரியமா?
கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. என்று கூறவேண்டும்.

பிக்சல் டேப்லெட்
அதேபோல் பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டின் போது பிக்சல் டேப்லெட் மாடல் சார்ஜிங் டாக் உடன் விற்பனை செய்யப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.குறிப்பாக இந்த பிக்சல் டேப்லெட் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

சார்ஜிங் டாக்
இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்படும் சார்ஜிங் டாக்-இல் ஸ்பீக்கர் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக பிக்சல் டேப்லெட்-ஐ டாக் செய்ததும் அது ஹேண்ட்ஸ்-ஃபீரி அசிஸ்டண்ட் போலவும் அல்லது போட்டோ ஃபிரேம் போலவும் செயல்படும்.

இதுதவிர ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கவும் வழி செய்கிறது. பின்பு இந்த சாதனத்தின் அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளது. அதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

10.9-இன்ச் டிஸ்பிளே
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த கூகுள் பிக்சல் டேப்லெட் ஆனது 10.9-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

256ஜிபி ஸ்டோரேஜ்
கூகுள் டேப்லெட் மாடல் ஆனது 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வைஃபை 6, ஜிபிஎஸ் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவரும் கூகுள் பிக்சல் டேப்லெட் மாடல்.

கூகுள் பிக்சல் டேப்லெட் மாடல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட்மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டென்சார் ஜி2 சிப்செட்
குறிப்பாக பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சார் ஜி2 சிப்செட் தான் பிக்சல் டேப்லெட் மாடலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இது சிறந்த இமேஜ் பிராசஸிங் மற்றும் மெஷின் லெர்னிங் வசதிகளை வழங்குகிறது.
அதேபோல் இந்த டேப்லெட் ஆனது பிரீமியம் நானோ செராமிக் பினிஷ் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு கூகுள் நிறுவனம் பல அட்டகாசமான சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications