Home
Tablets

பிளிப்கார்ட் சேல் 2025.. 10000mAh பேட்டரி.. 12.1-இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் ரெட்மி 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (REDMI Pad Pro 5G) மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த டேப்லெட் மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Wi-Fi+5G) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ரெட்மி டேப்லெட் மாடலை ரூ.21499 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் சேல் 2025.. ஆஃபரில் ரெட்மி 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): இந்த ரெட்மி டேப்லெட் 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 2560 × 1600 பிக்சல்ஸ், 120Hzரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெளிவந்தது. பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆணட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

தரமான அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இந்த டேப்லெட் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

8எம்பி ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

பிளிப்கார்ட் சேல் 2025.. ஆஃபரில் ரெட்மி 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த ரெட்மி டேப்லெட் வெளிவந்துள்ளது.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது
இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இதில் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. குவிக் சில்வர் (Quick Silver), கிராஃபைட் கிரே (Graphite Gray) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

10000mAh பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை 6 802.11ஏசி, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி 2.0 போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Freedom Sale 2025: Redmi Pad Pro 5G available at discounted price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X