முடிச்சு விட்டீங்க போங்க.. 10000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Poco 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Freedom Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை இன்று இரவு முடிவடைகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான போக்கோ 5ஜி டேப்டெல் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் போக்கோ பேட் 5ஜி (POCO Pad 5G) மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.20499 விலையில் வாங்கிவிட முடியும்.

போக்கோ பேட் 5ஜி அம்சங்கள் (POCO Pad 5G Specifications): தரமான 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்தது. இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 12.1 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த அட்டகாசமான டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2560 × 1600 பிக்சல்கள், 2.5K ரெசல்யூஷன் , 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலிலின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Dolby Vision Corning Gorilla Glass 3) பாதுகாப்பு உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ பேட் 5ஜி மாடல். 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இயங்குகிறது போக்கோ 5ஜி டேப்லெட் . குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களை இந்த டேப்லெட் மாடலில் பயன்படுத்த முடியும். பின்பு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இதில் உள்ளது.
இதில் 5ஜி சிம் கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. இந்த போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டில் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) இருக்கின்றன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
அதுவும் 10000mAh பேட்டரி உடன் போக்கோ பேட் 5ஜி வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் 16 மணி நேரம் வீடியோ பிளேபேக் கொடுக்கும். இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charing) சப்போர்ட் கிடைக்கிறது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி (5G) கனெக்டிவிட்டியுடன் வை-பை (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) சப்போர்ட் இதில் கிடைக்கிறது. கோபால்டு ப்ளூ (Cobalt Blue), பிஸ்தாசியோ கிரீன் (Pistachio Green) கலர்களில் இந்த டேப்டெல் மாடலை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








