ஆளுக்கு 1 ஆர்டர்.. 10.61-இன்ச் டிஸ்பிளே.. 7700mAh பேட்டரி.. ஆஃபரில் Lenovo 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனையில் தரமான லெனோவா 5ஜி டேப்லெட் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் லெனோவா எம்10 5ஜி மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த லெனோவா எம்10 5ஜி (Lenovo M10 5G) மாடலை ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த லெனோவா எம்10 5ஜி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது லெனோவா எம்10 5ஜி ஆனது 10.61-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லெனோவா எம்10 5ஜி மாடல் குவால்காம் ஸ்னாப்ராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது . இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் தான் மிகவும் சக்திவாய்ந்தது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா டேப்லெட். குறிப்பாக அனைத்து கேமிங் ஆப்ஸ்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லெனோவா எம்10 5ஜி டேப்லெட் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த லெனோவா எம்10 5ஜி மாடல். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
லெனோவா எம்10 5ஜி மாடல் 13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த லெனோவா டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது 7700 எம்எஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
லெனோவா எம்10 5ஜி டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த 5ஜி டேப்லெட் சற்று குறைந்த விலையில் தனித்துவமான அம்சங்களுடன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் லெனோவா நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications