மொபைல் விலையில் டேப்லெட்.. ரூ.9,899 இல்லனா ரூ.11,749 போதும்.. செப்.23 முதல் Flipkart Sale இல் கூட்டம் அள்ளும்!
செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில்.. நீங்கள் ஸ்மார்ட்போனையோ அல்லது ஸ்மார்ட் டிவியையோ வாங்க போவதில்லை. மாறாக நல்ல ஆபர் விலையில் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் டேப்லெட்களை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால்.. சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
உங்களுக்கு பிடித்த அல்லது உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற அல்லது உங்களுடையய அன்றாட பணிகளுக்கு ஏற்ற டேப்லெட்களை மிகக் குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான நேரம். ஆப்பிளின் பிரீமியம் ஐபேட்கள், சாம்சங்கின் பீச்சர்-பேக்டு கேலக்ஸி டேப்கள், மோட்டோரோலாவின் சக்திவாய்ந்த பேட் சீரீஸ் மற்றும் ஒப்போ, ஷாவ்மீ, ஒன்பிளஸ் மற்றும் ரெட்மி ஆகிய பிராண்டுகளின் பிரபல டேப்லெட் மாடல்கள் என பல ஆபர் விலையில் வாங்க பல ஆப்ஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

1. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S9 FE Plus): இது அசல் விலையான ரூ.55,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் (Samsung Galaxy Tab A9 Plus): இது அசல் விலையான ரூ.32,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.
3. மோட்டோ பேட் 60 ப்ரோ (Moto Pad 60 Pro): இது அசல் விலையான ரூ.43,999 க்கு பதிலாக ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கும்.
4. மோட்டோ பேட் 60 நியோ (Moto Pad 60 Neo): இது அசல் விலையான ரூ.28,000 க்கு பதிலாக ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கும்.
5. ஒப்போ பேட் எஸ்இ (OPPO Pad SE): இது அசல் விலையான ரூ.19,499 க்கு பதிலாக வெறும் ரூ.9,899 க்கு வாங்க கிடைக்கும்.
6. ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite): இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.11,749 க்கு வாங்க கிடைக்கும்.
7. ஷாவ்மீ பேட் 7 (Xiaomi Pad 7): இது அசல் விலையான ரூ.34,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும்.
8. ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G): இது அசல் விலையான ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
9. ஆப்பிள் ஐபேட் ப்ரோ: இது அசல் விலையான ரூ.99,900 க்கு பதிலாக ரூ.83,999 க்கு வாங்க கிடைக்கும்.
10. ஆப்பிள் ஐபேட் ஏ16 சிப்: இது அசல் விலையான ரூ.34,900 க்கு பதிலாக ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஏ16 சிப் உடனான ஆப்பிள் ஐபேட் மாடலின் விரிவான அம்சங்கள்: ஆப்பிள் நிறுவனம் ஏ16 சிப் உடனான ஐபேட் (iPad with A16 Chip) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 10.9-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது எம் சீரிஸ் சிப்-ஐ தவிர்த்து, ஆப்பிளின் பழைய 16 சிப்பை பேக் செய்கிறது. இந்த சிப் 4 ஜிபியு கோர்கள் மற்றும் 16 நியூரல் என்ஜின் கோர்கள் கொண்ட 5 கோர் சிபியு ஆகும்.
ஐபேட் 18 ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆப்பிளின் இந்த பேஸ் ஐபேட் மாடல் ஆனது 3 சேமிப்பக வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக, பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இது ஐபாட் ஏர் மாடலில் உள்ளதை போலவே, பின்புறத்தில் 12 எம்பி ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 12 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 28.6Whr பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது வைஃபையின் கீழ் 10 மணிநேர பரவுஸிங் பேட்டரி லைஃப்-ஐ உறுதியளிக்கிறது. கூடவே இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோஃபோன்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் டச் ஐடி ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக ஆப்பிளின் இந்த பேஸ் ஐபேட் மாடலானது 480 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது மற்றும் இது 7 மிமீ தடிமனை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








