Samsung மற்றும் Apple-ன் முக்கிய மார்க்கெட்டை குறி வைத்த OnePlus.. 2023-ல் முதல் Tablet!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மாரட்போன், ஸ்மார்ட் டிவி, இயர்போன் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

ஒன்பிளஸ் டேப்லெட்

ஒன்பிளஸ் டேப்லெட்

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த டேப்லெட் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மட்டும் அறிமுகமானால் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

ஆப்பிள் மற்றும் சாம்சங்

அதாவது ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தான் பீரிமியம் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. தற்போது ஒன்பிளஸ் நிறுவனமும் பீரிமியம் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதால் கண்டிப்பாக மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.

Flipkart-ல் வெறும் ரூ.11,050 க்கு வாங்க கிடைக்கும் VIVO-வின் ரூ.16,990 ஸ்மாட்போன்!Flipkart-ல் வெறும் ரூ.11,050 க்கு வாங்க கிடைக்கும் VIVO-வின் ரூ.16,990 ஸ்மாட்போன்!

ஒன்பிளஸ் டேப்லெட்

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் டேப்லெட் தரமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு மற்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களை விட உயர்தர அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் ஒன்பிளஸ் பேட் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே

மேலும் இந்த ஒன்பிளஸ் பேட் மாடலின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது,அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். அதாவது ஒன்பிளஸ் பேட் ஆனது 12.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே மற்றும் ஃபுல் எச்டி பிளஸ் ஆதரவு இருப்பதால் இந்த டேப்லெட் நல்ல திரை அனுபவம் கொடுக்கும்.

 ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட்
கேமிங் பயன்பாடுகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த செயல்திறன்கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்.

13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

மேலும் 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 10,090 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட்.

அதேபோல் இந்நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவரும். இணையத்தில் கசிந்த தகவலின்படி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,999-விலையில் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
First OnePlus tablet to launch in 2023 only may take apple iPad and Samsung premium tablets: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X